Abhirami Anthadhi

 

Abhirami Anthadhi is a Tamil collection of poems sung in praise of Goddess Abhirami of Amirthakadeswarar Shiva Temple in Tirukkadaiyur, Tamil Nadu. This poem was composed by Abirami Pattar in the 18th century. The poem comprises 100 slokas and each and every stanza of the poem Abirami Andhadhi is a gem that has a deeper meaning. This song comes under a class of Tamil poetry called “Anthaadhi” (In Tamil “Antham” means end and “Aadhi” means beginning). So you can see here in this Abhirami Anthadhi poem, the end word from the sloka forms the beginning word of the next sloka. Through this poem, we can see the outpouring feelings in the heart of the author and his deep devotion towards the mother Goddess Abhirami.

We at srividyamantra.com have immense pleasure and seek blessings from Goddess Abhirami, to share the amazing verses from Abirami Andhadhi poem along with its Tamil meaning for your better understanding of the verses. To recite the 100 poems of Abirami Andhadhi Parayanam takes just 15 to 20 minutes only. We request you all to meditate on this parayanam and invoke the blessings of mother Goddess Abirami.

 

 Song Index:

  1. Ganapathy Kaapu
  2. Abhirami Anthadhi Sloka 1
  3. Abhirami Anthadhi Sloka 2
  4. Abhirami Anthadhi Sloka 3
  5. Abhirami Anthadhi Sloka 4
  6. Abhirami Anthadhi Sloka 5
  7. Abhirami Anthadhi Sloka 6
  8. Abhirami Anthadhi Sloka 7
  9. Abhirami Anthadhi Sloka 8
  10. Abhirami Anthadhi Sloka 9
  11. Abhirami Anthadhi Sloka10
  12. Abhirami Anthadhi Sloka 11
  13. Abhirami Anthadhi Sloka 12
  14. Abhirami Anthadhi Sloka 13
  15. Abhirami Anthadhi Sloka 14
  16. Abhirami Anthadhi Sloka 15
  17. Abhirami Anthadhi Sloka 16
  18. Abhirami Anthadhi Sloka 17
  19. Abhirami Anthadhi Sloka 18
  20. Abhirami Anthadhi Sloka 19
  21. Abhirami Anthadhi Sloka 20
  22. Abhirami Anthadhi Sloka 21
  23. Abhirami Anthadhi Sloka 22
  24. Abhirami Anthadhi Sloka 23
  25. Abhirami Anthadhi Sloka 24
  26. Abhirami Anthadhi Sloka 25
  27. Abhirami Anthadhi Sloka 26
  28. Abhirami Anthadhi Sloka 27
  29. Abhirami Anthadhi Sloka 28
  30. Abhirami Anthadhi Sloka 29
  31. Abhirami Anthadhi Sloka 30
  32. Abhirami Anthadhi Sloka 31
  33.  Abhirami Anthadhi Sloka 32
  34.  Abhirami Anthadhi Sloka 33
  35.  Abhirami Anthadhi Sloka 34
  36.  Abhirami Anthadhi Sloka 35
  37.  Abhirami Anthadhi Sloka 36
  38.  Abhirami Anthadhi Sloka 37
  39.  Abhirami Anthadhi Sloka 38
  40.  Abhirami Anthadhi Sloka 39
  41.  Abhirami Anthadhi Sloka 40
  42.  Abhirami Anthadhi Sloka 41
  43. Abhirami Anthadhi Sloka 42
  44.  Abhirami Anthadhi Sloka 43
  45.  Abhirami Anthadhi Sloka 44
  46.  Abhirami Anthadhi Sloka 45
  47.  Abhirami Anthadhi Sloka 46
  48.  Abhirami Anthadhi Sloka 47
  49.  Abhirami Anthadhi Sloka 48
  50.  Abhirami Anthadhi Sloka 49
  51.  Abhirami Anthadhi Sloka 50
  52.  Abhirami Anthadhi Sloka 51
  53.  Abhirami Anthadhi Sloka 52
  54.  Abhirami Anthadhi Sloka 53
  55.  Abhirami Anthadhi Sloka 54
  56.  Abhirami Anthadhi Sloka 55
  57.  Abhirami Anthadhi Sloka 56
  58.  Abhirami Anthadhi Sloka 57
  59.  Abhirami Anthadhi Sloka 58
  60.  Abhirami Anthadhi Sloka 59
  61.  Abhirami Anthadhi Sloka 60
  62.  Abhirami Anthadhi Sloka 61
  63.  Abhirami Anthadhi Sloka 62
  64.  Abhirami Anthadhi Sloka 63
  65.  Abhirami Anthadhi Sloka 64
  66.  Abhirami Anthadhi Sloka 65
  67.  Abhirami Anthadhi Sloka 66
  68.  Abhirami Anthadhi Sloka 67
  69.  Abhirami Anthadhi Sloka 68
  70.  Abhirami Anthadhi Sloka 69
  71.  Abhirami Anthadhi Sloka 70
  72.  Abhirami Anthadhi Sloka 71
  73.  Abhirami Anthadhi Sloka 72
  74.  Abhirami Anthadhi Sloka 73
  75.  Abhirami Anthadhi Sloka 74
  76.  Abhirami Anthadhi Sloka 75
  77.  Abhirami Anthadhi Sloka 76
  78.  Abhirami Anthadhi Sloka 77

Ganapathy Kaapu

 

Ganapathy Kaapu Sloka Meaning

கணபதி காப்பு

தாரமர் கொன்றையும் சண்பகமாலையும் சாத்தும் தில்லை
ஊரார் தம் பாகத்து உமைமைந்தனே! உலகு ஏழும் பெற்ற
சீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதியே! நிற்க கட்டுரையே.

 

Abhirami Anthadhi Sloka 1

 

Abhirami Anthadhi Sloka 1 Meaning

 

Abhirami Anthadhi Sloka 1 Lyrics

 

ஞானமும் நல்வித்தையும் பெற

1) உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக்குங்கும தோயமென்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழுத்துணையே.

 

Abhirami Anthadhi Sloka 2

 

Abhirami Anthadhi Sloka 2 Meaning

 

Abhirami Anthadhi Sloka 2 Lyrics

 

பிரிந்தவர் ஒன்று சேர

2) துணையும் தொழும் தெய்வமும், பெற்றதாயும் சுருதிகளின்
பணையும், கொழுந்தும் பதி கொண்டவேரும் பனிமலர்பூங்
கணையும், கருப்புச்சிலையும், மென்பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே.

 

Abhirami Anthadhi Sloka 3

 

Abhirami Anthadhi Sloka 3 Meaning

 

Abhirami Anthadhi Sloka 3 Lyrics

 

குடும்பக் கவலையிலிருந்து விடுபட

3)அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன் உனது திருவடிக்கே, திருவே! வெருவிப்
பிறந்தேன் நின்அன்பர் பெருமைஎண்ணாதகரும நெஞ்சால்
மறிந்தே விழும் நரகுக்கு உறவாய மனிதரையே.

 

Abhirami Anthadhi Sloka 4

 

Abhirami Anthadhi Sloka 4 Meaning

 

Abhirami Anthadhi Sloka 4 Lyrics

 

உயர் பதவிகளை அடைய

4) மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றைவார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும், பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே.

 

Abhirami Anthadhi Sloka 5

 

Abhirami Anthadhi Sloka 5 Meaning

 

Abhirami Anthadhi Sloka 5 Lyrics

 

மனக்கவலை தீர

5) பொருந்திய முப்புரை! செப்புரை செய்யும் புணர்முலையால்
வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி! வார்சடையோன்
அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை! அம்புயமேல்
திருந்திய சுந்தரி அந்தரி பாதம்என் சென்னியதே

 

Abhirami Anthadhi Sloka 6

 

Abhirami Anthadhi Sloka 6 Meaning

 

Abhirami Anthadhi Sloka 6 Lyrics

 

மந்திர சித்தி பெற

6) சென்னியது உன்பொன் திருவடித்தாமரை; சிந்தையுள்ளே
மன்னியது உன் திருமந்திரம்; சிந்துர வண்ணப்பெண்ணே!
முன்னிய நின் அடி யாருடன் கூடி முறை முறையே
பன்னியது என்றும் உன் தன் பரமாகம பத்ததியே.

 

Abhirami Anthadhi Sloka 7

 

Abhirami Anthadhi Sloka 7 Meaning

 

Abhirami Anthadhi Sloka 7 Lyrics

 

மலையென வரும் துன்பம் பனியென நீங்க

7) ததியுறு மத்திற் சுழலும் என்ஆவி தளர்விலதோர்
கதியுறும் வண்ணம் கருது கண்டாய்; கமலாலயனும்,
மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கிஎன்றும்
துதியுறு சேவடியாய்! சிந்துரானன சுந்தரியே.

 

Abhirami Anthadhi Sloka 8

 

Abhirami Anthadhi Sloka 8 Meaning

 

Abhirami Anthadhi Sloka 8 Lyrics

 

பற்றுகள் நீங்கி பக்தி பெருகிட

8) சுந்தரி! எந்தை துணைவி! என் பாசத் தொடரைஎல்லாம்
வந்தரி; சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி; நீலி; அழியாத கன்னிகை; ஆரணத்தோன்
கம்தரி; கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே

 

Abhirami Anthadhi Sloka 9

 

Abhirami Anthadhi Sloka 9 Meaning

 

Abhirami Anthadhi Sloka 9 Lyrics

 

அனைத்தும் வசமாக

9) கருத்தன, எந்தை தன் கண்ணன், வண்ணக் கனகவெற்பில்
பெருத்தன, பால்அழும் பிள்ளைக்கு நல்கின, பேரருள்கூர்
திருத்தன பாரமும் ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்
முருத்தனமூரலும், நீயும், அம்மே! வந்துஎன்முன் நிற்கவே

 

Abhirami Anthadhi Sloka 10

 

Abhirami Anthadhi Sloka 10 Meaning

 

Abhirami Anthadhi Sloka 10 Lyrics

 

மோட்ச சாதனம் பெற

10) நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் நினைப்பது உன்னை;
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்; எழுதாமறையின்
ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே இமயத்து
அன்றும் பிறந்தவளே! அழியா முத்தி ஆனந்தமே!

 

Abhirami Anthadhi Sloka 11

 

Abhirami Anthadhi Sloka 11 Meaning

 

Abhirami Anthadhi Sloka 11 Lyrics

 

இல்வாழ்க்கையில் இன்பம் பெற

11) ஆனந்தமாய் என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,
வான் அந்தமான வடிவுடையாள், மறை நான்கினுக்கும்
தான் அந்தமான சரணார விந்தம் தவளநிறக்
கானம் தம் ஆடரங்கம் எம்பிரான் முடிக்கண்ணியதே.

 

Abhirami Anthadhi Sloka 12

 

Abhirami Anthadhi Sloka 12 Meaning

 

Abhirami Anthadhi Sloka 12 Lyrics

 

தியானத்தில் நிலைபெற

12) கண்ணியது உன்புகழ் கற்பது உன்; நாமம் கசிந்து பத்தி
பண்ணியது உன் இருபாதாம் புயத்தில்; பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து; நான் முன்செய்த
புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே.

 

Abhirami Anthadhi Sloka 13

 

Abhirami Anthadhi Sloka 13 Meaning

 

Abhirami Anthadhi Sloka 13 Lyrics

 

வைராக்கிய நிலை எய்த

13) பூத்தவளே புவனம் பதினான்கையும்; பூத்தவண்ணம்
காத்தவளே பின்கரந்தவளே! கறைக் கண்டனுக்கு
மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!
மாத்தவளே உன்னை அன்றிமற்றோர் தெய்வம் வந்திப்பதே!

 

Abhirami Anthadhi Sloka 14

 

Abhirami Anthadhi Sloka 14 Meaning

 

Abhirami Anthadhi Sloka 14 Lyrics

 

தலைமை பெற

14) வந்திப்பவர் உன்னை வானவர், தானவர், ஆனவர்கள்;
சிந்திப்பவர் நல் திசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே;
பந்திப்பவர் அழியாப் பரமானந்தர்; பாரில் உன்னைச்
சந்திப்பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண் ஒளியே.

 

Abhirami Anthadhi Sloka 15

 

Abhirami Anthadhi Sloka 15 Meaning

 

Abhirami Anthadhi Sloka 15 Lyrics

பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெற

15) தண்ணளிக்கு என்றுமுன்னே பலகோடிதவங்கள் செய்வார்
மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார்? மதிவானவர் தம்
விண்ணளிக்கும் செல்வமும் அழியா முத்தி வீடுமன்றோ?
பண்ணளிக்கும் சொல் பரிமள யாமளைப் பைங்கிளியே.

 

Abhirami Anthadhi Sloka 16

 

Abhirami Anthadhi Sloka 16 Meaning

 

Abhirami Anthadhi Sloka 16 Lyrics

 

முக்காலமும் உணரும் திறன் உண்டாக

16) கிளியே! கிளைஞர் மனத்தே கிடந்து, கிளர்ந்து, ஒளிரும்
ஒளியே! ஒளிரும் ஒளிக்கிடமே எண்ணில் ஒன்றுமில்லா
வெளியே! வெளிமுதல் பூதங்களாகி விரிந்த அம்மே!
அளியேன் அறிவளவிற்கு அளவானது அதிசயமே.

 

Abhirami Anthadhi Sloka 17

 

Abhirami Anthadhi Sloka 17 Meaning

 

Abhirami Anthadhi Sloka 17 Lyrics

 

கன்னிகைகளுக்கு நல்ல வரன் அமைய

17) அதிசயமான வடிவுடையாள், அரவிந்தமெல்லாம்
துதிசய ஆனன சுந்தரவல்லி, துணைஇரதி
பதிசயமானது அபசயம் ஆக முன் பார்த்தவர் தம்
மதிசயமாக அன்றோ வாமபாகத்தை வவ்வியதே.

 

Abhirami Anthadhi Sloka 18

 

Abhirami Anthadhi Sloka 18 Meaning

 

Abhirami Anthadhi Sloka 18 Lyrics

 

மரண பயம் நீங்க

18) வவ்விய பாகத்து இறைவரும், நீயும் மகிழ்ந்திருக்கும்
செவ்வியும், உங்கள் திருமணக்கோலமும் சிந்தையுள்ளே
அவ்வியம் தீர்த்தென்னை ஆண்டபொற்பாதமும் ஆகிவந்து
வெவ்விய காலன் என்மேல்வரும் போது வெளிநிற்கவே.

 

Abhirami Anthadhi Sloka 19

 

Abhirami Anthadhi Sloka 19 Meaning

 

Abhirami Anthadhi Sloka 19 Lyrics

 

பேரின்ப நிலையடைய

19) வெளிநின்ற நின் திருமேனியைப்பார்த்தேன் விழியும் நெஞ்சும்,
களிநின்ற வெள்ளம் கரை கண்டதில்லை; கருத்தினுள்ளே
தெளிநின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ?
ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே.

 

Abhirami Anthadhi Sloka 20

 

Abhirami Anthadhi Sloka 20 Meaning

 

Abhirami Anthadhi Sloka 20 Lyrics

வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாக

20) உறைகின்ற நின் திருக்கோயிலில் நின்கேள்வர் ஒருபக்கமோ?
அறைகின்ற நான்மறையின் அடியோ? முடியோ? அமுதம்
நிறைகின்ற வெண்திங்களோ? கஞ்சமோ? எந்தன் நெஞ்சமோ?
மறைகின்ற வாரிதியோ? பூரணாசல மங்கலையே.

 

Abhirami Anthadhi Sloka 21

 

Abhirami Anthadhi Sloka 21 Meaning

 

Abhirami Anthadhi Sloka 21 Lyrics

 

அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் தொலைய

21) மங்கலை! செங்கலசம் முலையாள்! மலையாள்! வருணச்
சங்கலை செங்கை! சகலகலாமயில்! தாவுகங்கை
பொங்கு அலைதங்கும் புரிசடையோன் புடையாள்! உடையாள்!
பிங்கலை! நீலி! செய்யாள்! வெளியாள்! பசும் பொற்கொடியே.

 

Abhirami Anthadhi Sloka 22

 

Abhirami Anthadhi Sloka 22 Meaning

 

Abhirami Anthadhi Sloka 22 Lyrics

 

இனிப் பிறவா நெறி அடைய

22) கொடியே! இளவஞ்சிக் கொம்பே எனக்கு வம்பே பழுத்த
படியே! மறையின் பரிமளமே! பனிமால் இமயப்
பிடியே! பிரமன் முதலாய தேவரைப் பெற்ற அம்மே!
அடியேன் இறந்து இங்கு இனிப்பிறவாமல் வந்தாண்டு கொள்ளே.

 

Abhirami Anthadhi Sloka 23

 

Abhirami Anthadhi Sloka 23 Meaning

 

Abhirami Anthadhi Sloka 23 Lyrics

 

எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்க

23) கொள்ளேன் மனத்தில் நின்கோலம் அல்லாது; என்பர் கூட்டம் தன்னை
விள்ளேன்; பரசமயம் விரும்பேன்; வியன் மூவுலகுக்கு
உள்ளே, அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த
கள்ளே! களிக்கும் களியே அளிய என் கண்மணியே.

 

Abhirami Anthadhi Sloka 24

 

Abhirami Anthadhi Sloka 24 Meaning

 

Abhirami Anthadhi Sloka 24 Lyrics

 

நோய்கள் விலக

24) மணியே! மணியின் ஒளியே! ஒளிரும் மணிபுனைந்த
அணியே! அணியும் அணிக்கு அழகே! அணுகாதவர்க்குப்
பிணியே! பிணிக்கு மருந்தே! அமரர் பெருவிருந்தே!
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்தபின்னே.

 

Abhirami Anthadhi Sloka 25

 

Abhirami Anthadhi Sloka 25 Meaning

 

Abhirami Anthadhi Sloka 25 Lyrics

 

நினைத்த காரியம் நிறைவேற

25) பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணிப் பிறப்பறுக்க
முன்னே தவங்கள் முயன்று கொண்டேன்; முதல் மூவருக்கும்
அன்னே! உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே!
என்னே! இனி உன்னையான் மறவாமல் நின்று ஏத்துவனே.

 

Abhirami Anthadhi Sloka 26

 

Abhirami Anthadhi Sloka 26 Meaning

 

Abhirami Anthadhi Sloka 26 Lyrics

 

சொல்வாக்கும் செல்வாக்கும் பெருக

26) ஏத்தும் அடியவர் ஈரேழுலகினையும் படைத்தும்,
காத்தும், அழித்தும் திரிபவராம்; கமழ் பூங்கடம்பு
சாத்தும்குழல் அணங்கே! மணம் நாறும் நின்தாள் இணைக்கு என்
நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடத்தே.

 

Abhirami Anthadhi Sloka 27

 

Abhirami Anthadhi Sloka 27 Meaning

 

Abhirami Anthadhi Sloka 27 Lyrics

 

மனநோய் அகல

உடைத்தனை வஞ்சப் பிறவியை; உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை; பத்மபதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை; நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருள்புனலால்
துடைத்தனை; சுந்தரி! நின்னருள் ஏதென்று சொல்லுவதே.

 

Abhirami Anthadhi Sloka 28

 

Abhirami Anthadhi Sloka 28 Meaning

 

Abhirami Anthadhi Sloka 28 Lyrics

 

இம்மை மறுமை இன்பங்கள் அடைய

28) சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே நின் புதுமலர்த்தாள்
அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே.

 

Abhirami Anthadhi Sloka 29

 

Abhirami Anthadhi Sloka 29 Meaning

 

Abhirami Anthadhi Sloka 29 Lyrics

 

எல்லா சித்திகளும் அடைய

29) சித்தியும், சித்திதரும் தெய்வமுமாகத் திகழும்
பராசத்தியும், சக்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார்
முத்தியும், முத்திக்கு வித்தும், வித்தாகி முளைத்தெழுந்த
புத்தியும், புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தையன்றே.

 

Abhirami Anthadhi Sloka 30

 

Abhirami Anthadhi Sloka 30 Meaning

 

Abhirami Anthadhi Sloka 30 Lyrics

 

அடுத்தடுத்து வரும் துன்பங்கள் நீங்க

30) அன்றே தடுத்து! என்னை ஆண்டுகொண்டாய்; கொண்டதல்ல என்கை
நன்றே உனக்கு இனி நான் என்செயினும், நடுக்கடலுள்
சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமே;
ஒன்றே! பல உருவே! அருவே! என் உமையவளே!

 

Abhirami Anthadhi Sloka 31

 

Abhirami Anthadhi Sloka 31 Meaning

 

Abhirami Anthadhi Sloka 31 Lyrics

 

மறுமையில் இன்பம் உண்டாக

31) உமையும், உமையொரு பாகனும் ஏக உருவில் வந்திங்கு
எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார்; இனி எண்ணுதற்குச்
சமையங்களும் இல்லை; ஈன்றெடுப்பாள் ஒரு தாயும் இல்லை;
அமையும் அமையுறு தோளியர் மேல் வைத்த ஆசையுமே.

 

Abhirami Anthadhi Sloka 32

 

Abhirami Anthadhi Sloka 32 Meaning

 

Abhirami Anthadhi Sloka 32 Lyrics

 

துர்மரணம் வராமலிருக்க

32) ஆசைக்கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப்
பாசத்தில் அல்லல்பட இருந்தேனை, நின் பாதம் என்னும்
வாசக்கமலம் தலைமேல் வலியவைத்து ஆண்டு கொண்ட
நேசத்தை என் சொல்லுவேன்? ஈசர்பாகத்து நேரிழையே!

 

Abhirami Anthadhi Sloka 33

 

Abhirami Anthadhi Sloka 33 Meaning

 

Abhirami Anthadhi Sloka 33 Lyrics

 

இறக்கும் நிலையிலும் அம்பிகை நினைவோடு இருக்க

33) இழைக்கும் வினைவழியே ஆடும் காலன் எனைநடுங்க
அழைக்கும் பொழுதுவந்து அஞ்சல் என்பாய்; அத்தர் சித்தமெல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை யாமலைக் கோமளையே!
உழைக்கும் பொழுது உன்னையே அன்னையே என்பன் ஓடிவந்தே.

 

Abhirami Anthadhi Sloka 34

 

Abhirami Anthadhi Sloka 34 Meaning

 

Abhirami Anthadhi Sloka 34 Lyrics

 

சிறந்த நன்செய் நிலங்கள் கிடைக்க

34) வந்தே சரணம் புகும் அடியாருக்கு வான்உலகம்
தந்தே பரிவொடு தான்போய் இருக்கும் சதுர்முகமும்
பைந்தேன் அலங்கல் பருமணி ஆகமும் பாகமும் பொன்
செந்தேன் மலரும் அலர்கதிர் ஞாயிறும் திங்களுமே.

 

Abhirami Anthadhi Sloka 35

 

Abhirami Anthadhi Sloka 35 Meaning

 

Abhirami Anthadhi Sloka 35 Lyrics

 

திருமணம் நிறைவேற

35) திங்கள் பசுவின் மணம் நாறும் சீறடி சென்னிவைக்க
எங்கட்கு ஒருதவம் எய்தியவா! எண்ணிறந்த விண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ? தரங்கக் கடலுள்
வெங்கண் பணியணைமேல் துயில்கூரும் விழுப்பொருளே.

 

Abhirami Anthadhi Sloka 36

 

Abhirami Anthadhi Sloka 36 Meaning

 

Abhirami Anthadhi Sloka 36 Lyrics

 

பழைய வினைகள் வலிமை பெற

36) பொருளே! பொருள் முடிக்கும் போகமே! அரும்போகம் செய்யும்
மருளே! மருளில் வரும் தெருளே என் மனத்து வஞ்சத்து
இருளேதும் இன்றி ஒளிவெளியாகி இருக்கும் உன்தன்
அருளேது அறிகின்றிலேன் அம்புயாதனத்து அம்பிகையே!

 

Abhirami Anthadhi Sloka 37

 

Abhirami Anthadhi Sloka 37 Meaning

 

Abhirami Anthadhi Sloka 37 Lyrics

 

நவமணிகளைப் பெற

37) கைக்கே அணிவது கன்னலும் பூவும்; கமலம் அன்ன
மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை; விட அரவின்
பைக்கே அணிவது பண்மணிக்கோவையும் பட்டும், எட்டுத்
திக்கே அணியும் திருவுடையான் இடம் சேர்பவளே!

 

Abhirami Anthadhi Sloka 38

 

Abhirami Anthadhi Sloka 38 Meaning

 

Abhirami Anthadhi Sloka 38 Lyrics

 

வேண்டியதை வேண்டியவாறு அடைய

38) பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல்
தவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனைத்
துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணை முலையாள்
அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே.

 

Abhirami Anthadhi Sloka 39

 

Abhirami Anthadhi Sloka 39 Meaning

 

Abhirami Anthadhi Sloka 39 Lyrics

 

கருவிகளைக் கையாளும் வலிமை பெற

39) ஆளுகைக்கு உன் தன் அடித்தாமரைகள் உண்டு; அந்தகன்பால்
மீளுகைக்கு உன் தன் விழியின் கடைஉண்டு; மேல் இவற்றின்
மூளுகைக்கு என்குறை; நின்குறையே அன்று; முப்புரங்கள்
மாளுகைக்கு அம்பு தொடுத்த வில்லான் பங்கில் வாள்நுதலே!

 

Abhirami Anthadhi Sloka 40

 

Abhirami Anthadhi Sloka 40 Meaning

 

Abhirami Anthadhi Sloka 40 Lyrics

 

பூர்வ புண்ணியம் பலன்தர

40) வாணுதல் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப்
பேணுதற்கு எண்ணிய எம்பெருமாட்டியைப் பேதைநெஞ்சில்
காணதற்கு அண்ணியள் அல்லாத கன்னியைக் காணும் அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ முன்செய் புண்ணியமே

 

Abhirami Anthadhi Sloka 41

 

Abhirami Anthadhi Sloka 41 Meaning

 

Abhirami Anthadhi Sloka 41 Lyrics

 

நல்லடியார் நட்புப் பெற

41) புண்ணியம் செய்தனமே மனமே! புதுப் பூங்குவளைக்
கண்ணியும், செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடுவிருக்கப்
பண்ணிநம் சென்னியின் மேல் பத்மபாதம் பதித்திடவே.

 

Abhirami Anthadhi Sloka 42

 

Abhirami Anthadhi Sloka 42 Meaning

 

Abhirami Anthadhi Sloka 42 Lyrics

 

உலகினை வசப்படுத்த

42) இடம் கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி, இளகி, முத்து
வடம்கொண்ட கொங்கை மலை கொண்டு, இறைவர் வலிய நெஞ்சை
நடம்கொண்ட கொள்கை நலங்கொண்ட நாயகி நல்லரவின்
படங்கொண்ட அல்குல் பனிமொழி வேதப்பரிபுரையே.

 

Abhirami Anthadhi Sloka 43

 

Abhirami Anthadhi Sloka 43 Meaning

 

Abhirami Anthadhi Sloka 43 Lyrics

 

தீமைகள் ஒழிய

43) பரிபுரச் சீறடி! பாசாங் குசை! பஞ்ச பாணி! இன்சொல்
திரிபுர சுந்தரி சிந்துர மேனியள் தீமைநெஞ்சில்
பரிபுர வஞ்சரை அஞ்சக் குனிபொருப்புச் சிலைக்கை
எரிபுரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே.

 

Abhirami Anthadhi Sloka 44

 

Abhirami Anthadhi Sloka 44 Meaning

 

Abhirami Anthadhi Sloka 44 Lyrics

 

பிரிவுணர்ச்சி அகல

44) தவளே! இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே, அவர் தமக்கு அன்னையும் ஆயினள்; ஆகையினால்
இவளே, கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம்
துவளேன், இனியொரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே.

 

Abhirami Anthadhi Sloka 45

 

Abhirami Anthadhi Sloka 45 Meaning

 

Abhirami Anthadhi Sloka 45 Lyrics

 

உலகோர் பழியிலிருந்து விடுபட

45) தொண்டு செய்யாது நின் பாதம் தொழாது, துணிந்து இச்சையே
பண்டு செய்தார் உளரோ? இலரோ? அப்பரிசு அடியேன்
கண்டு செய்தால் அது கைதவமோ? அன்றிச் செய்தவமோ?
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே; பின் வெறுக்கை அன்றே.

 

Abhirami Anthadhi Sloka 46

 

Abhirami Anthadhi Sloka 46 Meaning

 

Abhirami Anthadhi Sloka 46 Lyrics

 

நல்நடத்தையோடு வாழ

46) வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியதன்றே; புது நஞ்சைஉண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்துபொன்னே!
மறுக்கும் தகைமைகள் செய்யினும், யான் உன்னை வாழ்த்துவேனே!

 

Abhirami Anthadhi Sloka 47

 

Abhirami Anthadhi Sloka 47 Meaning

 

Abhirami Anthadhi Sloka 47 Lyrics

 

யோகநிலை அடைய

47) வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன்; மனத்தே ஒருவர்
வீழும்படி அன்று, விள்ளும் படி அன்று, வேலைநிலம்
ஏழும் பருவரை எட்டும் எட்டாமல் இரவுபகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே.

 

Abhirami Anthadhi Sloka 48

 

Abhirami Anthadhi Sloka 48 Meaning

 

Abhirami Anthadhi Sloka 48 Lyrics

 

உடல் பற்று நீங்க

48) சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றிப்
படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதிந்து நெஞ்சில்
இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார் பின்னும் எய்துவரோ;
குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே.

 

Abhirami Anthadhi Sloka 49

 

Abhirami Anthadhi Sloka 49 Meaning

 

Abhirami Anthadhi Sloka 49 Lyrics

 

மரணத் துன்பம் இல்லாதிருக்க

49) குரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவி வெங்கூற்றுக்கிட்ட
வரம்பை அடுத்து மறுகும் அப்போது வளைக்கை அமைத்து
அரம்பை அடுத்த அரிவையர் சூழவந்து அஞ்சல்என்பாய்;
நரம்பை அடுத்த இசைவடிவாய் நின்ற நாயகியே.

 

Abhirami Anthadhi Sloka 50

 

Abhirami Anthadhi Sloka 50 Meaning

 

Abhirami Anthadhi Sloka 50 Lyrics

 

அம்பிகையை நேரில் காண

50) நாயகி; நான்முகி; நாராயணி; கை நளின பஞ்ச
சாயகி; சாம்பவி; சங்கரி; சாமளை; சாதிநச்சு
வாயகி; மாலினி; வாராகி; சூலினி; மாதங்கி என்று
ஆயகி ஆதி உடையாள் சரணம் அரண் நமக்கே.

 

Abhirami Anthadhi Sloka 51

 

Abhirami Anthadhi Sloka 51 Meaning

 

Abhirami Anthadhi Sloka 51 Lyrics

 

மோகம் நீங்க

51) அரணம் பொருள் என்றருள் ஒன்றிலாத அசுரர் தங்கள்
முரண்அன்றழிய முனிந்த பெம்மானும், முகுந்தனுமே
சரணம் சரணம் எனநின்ற நாயகி தன் அடியார்
மரணம், பிறவி இரண்டும் எய்தார் இந்த வையகத்தே

 

Abhirami Anthadhi Sloka 52

 

Abhirami Anthadhi Sloka 52 Meaning

 

Abhirami Anthadhi Sloka 52 Lyrics

 

பெருஞ்செல்வம் அடைய

52) வையம், துரகம், மதகரி, மாமகுடம், சிவிகை
பெய்யும் கனகம், பெருவிலை ஆரம், பிறைமுடித்த
ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கு, அன்பு முன்பு
செய்யும் தவம் உடையார்க்கு உளவாகிய சின்னங்களே

 

Abhirami Anthadhi Sloka 53

 

Abhirami Anthadhi Sloka 53 Meaning

 

Abhirami Anthadhi Sloka 53 Lyrics

 

பொய்யுணர்வு நீங்க

53) சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும்,
பென்னம் பெரிய முலையும், முத்தாரமும் பிச்சிமொய்த்து
கன்னங்கரிய குழலும்கண் மூன்றும் கருத்தில் வைத்துத்
தன்னந்தனி இருப்பார்க்கு இது போலும் தவமில்லையே

 

Abhirami Anthadhi Sloka 54

 

Abhirami Anthadhi Sloka 54 Meaning

 

Abhirami Anthadhi Sloka 54 Lyrics

 

கடன் தீர

54) இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால்சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒரு காலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே.

 

Abhirami Anthadhi Sloka 55

 

Abhirami Anthadhi Sloka 55 Meaning

 

Abhirami Anthadhi Sloka 55 Lyrics

 

மோனநிலை எய்த

55) மின்னாயிரம் ஒரு மெய்வடிவாகி விளங்குகின்றது
அன்னாள்; அகமகிழ் ஆனந்தவல்லி; அருமறைக்கு
முன்னாய் நடுஎங்குமாய் முடிவாய முதல்விதன்னை
உன்னாது ஒழியினும், உன்னினும் வேண்டுவது ஒன்று இல்லையே.

 

Abhirami Anthadhi Sloka 56

 

Abhirami Anthadhi Sloka 56 Meaning

 

Abhirami Anthadhi Sloka 56 Lyrics

 

யாவரையும் வசீகரிக்கும் ஆற்றல் உண்டாக

56) ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து இவ்வுலம் எங்குமாய்
நின்றாள், அனைத்தையும் நீங்கி நிற்பாள்என்தன் நெஞ்சினுள்ளே
பொன்றாது நின்று புரிகின்றவா; இப்பொருள் அறிவார்
அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் என் ஐயனுமே.

 

Abhirami Anthadhi Sloka 57

 

Abhirami Anthadhi Sloka 57 Meaning

 

Abhirami Anthadhi Sloka 57 Lyrics

 

வறுமை ஒழிய

57) ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு அண்டமெல்லாம்
உய்ய அறம்செய்யும் உன்னையும் போற்றி ஒருவர்தம்பால்
செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்று பொய்யும்
மெய்யும் இயம்ப வைத்தாய் இதுவோ உன்தன் மெய்யருளே

 

Abhirami Anthadhi Sloka 58

 

Abhirami Anthadhi Sloka 58 Meaning

 

Abhirami Anthadhi Sloka 58 Lyrics

 

மனஅமைதி பெற

58) அருணாம் புயத்தும் என் சித்தாம் புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம் புயத்தும் முலைத்தையல் நல்லாள், தகை சேர்நயனக்
கருணாம் புயமும் வதனாம் புயமும் கராம்புயமும்,
சரணாம் புயமும் அல்லாற் கண்டிலேன் ஒருதஞ்சமுமே.

 

Abhirami Anthadhi Sloka 59

 

Abhirami Anthadhi Sloka 59 Meaning

 

Abhirami Anthadhi Sloka 59 Lyrics

 

பிள்ளைகள் நல்லவர்களாக வளர

59) தஞ்சம் பிறதில்லை ஈதல்லது என்று உன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் ஒன்றை; நீள்சிலையும்
அஞ்சும் அம்பும் மிக்கலராக நின்றாய்; அறியார் எனினும்
பஞ்சு அஞ்சும் மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே.

 

 

Abhirami Anthadhi Sloka 60

 

Abhirami Anthadhi Sloka 60 Meaning

 

Abhirami Anthadhi Sloka 60 Lyrics

 

மெய்யுணர்வு பெற

60) பாலினும் சொல் இனியாய்! பனி மாமலர்ப்பாதம் வைக்க
மாலினும் தேவர் வணங்கநின்றோன் கொன்றை வார்சடையின்
மேலினும் கீழ்நின்று வேதங்கள் பாடும் மெய்ப்பீடம் ஒரு
நாலினும் சாலநன்றோ அடியேன் முடைநாய்த்தலையே?

 

Abhirami Anthadhi Sloka 61

 

Abhirami Anthadhi Sloka 61 Meaning

 

Abhirami Anthadhi Sloka 61 Lyrics

 

மாயையை வெல்ல

61) நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்துவந்து
நீயே நினைவின்றி ஆண்டுகொண்டாய் நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவுதந்தாய் என்ன பேறுபெற்றேன்?
தாயே! மலைமகளே! செங்கண்மால் திருத்தங்கச்சியே

 

Abhirami Anthadhi Sloka 62

 

Abhirami Anthadhi Sloka 62 Meaning

 

Abhirami Anthadhi Sloka 62 Lyrics

 

எத்தகைய அச்சமும் அகல

62) தங்கச்சிலை கொண்டு தானவர் முப்புரம் சாய்த்து, மத
வெங்கண் கரிபுரி போர்த்த செஞ்சேவகன் மெய்யடையக்
கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி! கோகனகச்
செங்கைக் கரும்பும், அலரும் எப்போதும் என் சிந்தையதே.

 

Abhirami Anthadhi Sloka 63

 

Abhirami Anthadhi Sloka 63 Meaning

 

Abhirami Anthadhi Sloka 63 Lyrics

 

அறிவு தெளிவோடு இருக்க

63) தேறும்படி சில ஏதுவும் காட்டிமுன் செல்கதிக்குக்
கூறும்பொருள் குன்றில்கொட்டும் தறிகுறிக்கும்; சமயம்
ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும்
வேறும் சமயம் உண்டென்று கொண்டாடிய வீணருக்கே

 

Abhirami Anthadhi Sloka 64

 

Abhirami Anthadhi Sloka 64 Meaning

 

Abhirami Anthadhi Sloka 64 Lyrics

 

பக்தி பெருக

64) வீணே பலிகவர் தெய்வங்கள் பாற்சென்று மிக்க அன்பு
பூணேன்; உனக்கு அன்பு பூண்டு கொண்டேன்; நின்புகழ்ச்சியன்றிப்
பேணேன்; ஒருபொழுதும் திருமேனி பிரகாசமின்றிக்
காணேன் இருநிலமும் திசை நான்கும் ககனமுமே

 

Abhirami Anthadhi Sloka 65

 

Abhirami Anthadhi Sloka 65 Meaning

 

Abhirami Anthadhi Sloka 65 Lyrics

 

ஆண்மகப்பேறு அடைய

65) ககனமும், வானமும், புவனமும் காணவிற் காமன் அங்கம்
தகனம்முன் செய்த தவப்பெருமாற்குத் தடக்கையும் செம்
முகனும் முந்நான்கு இருமூன்றெனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயது அன்றோ? வல்லி நீ செய்த வல்லபமே!

 

Abhirami Anthadhi Sloka 66

 

Abhirami Anthadhi Sloka 66 Meaning

 

Abhirami Anthadhi Sloka 66 Lyrics

 

கவிஞராக

66) வல்லபம் ஒன்றறியேன்; சிறியேன் நின் மலரடிச்செம்
பல்லவம் அல்லது பற்று ஒன்றிலேன் பசும் பொற்பொருப்பு
வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய்; வினையேன்தொடுத்த
சொல் அவமாயினும் நின்திருநாமங்கள் தோத்திரமே.

 

Abhirami Anthadhi Sloka 67

 

Abhirami Anthadhi Sloka 67 Meaning

 

Abhirami Anthadhi Sloka 67 Lyrics

 

பகைவர்கள் அழிய

67) தோத்திரம் செய்து, தொழுது, மின்போலும் நின் தோற்றம்ஒரு
மாத்திரைப் போதும் மனதில் வையாதவர் வண்மை, குலம்
கோத்திரம், கல்வி, குணம், குன்றி நாளும் குடில்கள்தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்கு உழலாநிற்பர் பாரெங்குமே.

 

Abhirami Anthadhi Sloka 68

 

Abhirami Anthadhi Sloka 68 Meaning

 

Abhirami Anthadhi Sloka 68 Lyrics

 

நிலம் வீடு போன்ற செல்வங்கள் பெருக

68) பாரும், புனலும், கனலும், வெங்காலும், படர்விசும்பும்,
ஊரும் முருகு சுவைஒளி ஊறொலி ஒன்றுபடச்
சேரும் தலைவி, சிவகாமசுந்தரி சீரடிக்கே
சாரும் தவமுடையார் படையாத தனம் இல்லையே

 

Abhirami Anthadhi Sloka 69

 

Abhirami Anthadhi Sloka 69 Meaning

 

Abhirami Anthadhi Sloka 69 Lyrics

 

சகல சௌபாக்கியங்களும் அடைய

69) தனந்தரும்; கல்வி தரும்; ஒருநாளும் தளர்வறியா
மனந்தரும்; தெய்வ வடிவுந்தரும்; நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும்; நல்லன எல்லாம் தரும்; அன்பர் என்பவர்க்கே
கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.

 

Abhirami Anthadhi Sloka 70

 

Abhirami Anthadhi Sloka 70 Meaning

 

Abhirami Anthadhi Sloka 70 Lyrics

 

நுண் கலைகளில் சித்தி பெற

70) கண்களிக்கும்படி கண்டுகொண்டேன் கடம்பாடவியில்
பண்களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும்
மண்களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குலப்
பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே.

 

Abhirami Anthadhi Sloka 71

 

Abhirami Anthadhi Sloka 71 Meaning

 

Abhirami Anthadhi Sloka 71 Lyrics

 

மனக்குறைகள் தீர

71) அழகுக்கு ஒருவரும் ஒவ்வாதவல்லி; அருமறைகள்
பழகிச் சிவந்த பதாம் புயத்தாள்; பனி மாமதியின்
குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க
இழவுற்று நின்றுநெஞ்சே இரங்கேல் உனக்கு என் குறையே!

 

Abhirami Anthadhi Sloka 72

 

Abhirami Anthadhi Sloka 72 Meaning

 

Abhirami Anthadhi Sloka 72 Lyrics

 

பிறவிப் பிணி தீர

72) என்குறை தீரநின்று ஏத்துகின்றேன்; இனி யான் பிறக்கின்
நின்குறையே அன்றி யார் குறை காண்; இரு நீள்விசும்பின்
மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய்?
தன்குறை தீர எங்கோன் சடைமேல்வைத்த தாமரையே.

 

Abhirami Anthadhi Sloka 73

 

Abhirami Anthadhi Sloka 73 Meaning

 

Abhirami Anthadhi Sloka 73 Lyrics

 

குழந்தைப் பேறு உண்டாக

73) தாமம் கடம்பு; படைபஞ்சபாணம்; தனுக்கரும்பு;
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது; எமக்கென்று வைத்த
சேமம் திருவடி; செங்கைகள் நான்கு; ஒளி செம்மை; அம்மை
நாமம் திரிபுரை; ஒன்றோடு இரண்டு நயனங்களே.

 

Abhirami Anthadhi Sloka 74

 

Abhirami Anthadhi Sloka 74 Meaning

 

Abhirami Anthadhi Sloka 74 Lyrics

தொழிலில் மேன்மை அடைய

74) நயனங்கள் மூன்றுடை நாதனும், வேதமும், நாரணனும்
அயனும் பரவும் அபிராமவல்லி அடியிணையப்
பயன்என்று கொண்டவர் பாவையர் ஆடவும், பாடவும்பொன்
சயனம் பொருந்து தமனியக் காவினில் தங்குவரே.

 

Abhirami Anthadhi Sloka 75

 

Abhirami Anthadhi Sloka 75 Meaning

 

Abhirami Anthadhi Sloka 75 Lyrics

விதியை வெல்ல

75) தங்குவர் கற்பகத் தருவின் நீழலில்; தாயரின்றி
மங்குவர், மண்ணில் வழுவாப் பிறவியை; மால்வரையும்
பொங்குவர் அழியும்! ஈரேழ்புவனமும் பூத்த உந்திக்
கொங்கிவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே

 

Abhirami Anthadhi Sloka 76

 

Abhirami Anthadhi Sloka 76 Meaning

 

Abhirami Anthadhi Sloka 76 Lyrics

தனக்கு உரிமையானதைப் பெற

76) குறித்தேன் மனத்தில் நின்கோலம் எல்லாம்; நின் குறிப்பறிந்து
மறித்தேன் மறலிவருகின்ற நேர்வழி; வண்டுகிண்டி
வெறித்தேன் அவிழ்கொன்றை வேணிப்பிரான் ஒருகூற்றை மெய்யில்
பறித்தே குடிபுகுதும் பஞ்சபாண பயிரவியே

 

Abhirami Anthadhi Sloka 77

 

Abhirami Anthadhi Sloka 77 Meaning

 

Abhirami Anthadhi Sloka 77 Lyrics

 

பகை அச்சம் நீங்க

77) பயிரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்சபாணி, வஞ்சவர்
உயிரவி உண்ணும் உயர்சண்டி, காளி ஒளிரும்கலா
வயிரவி, மண்டலி, மாலினி, சூலி வராகி என்றே
செயிரவி நான்மறை சேர்திருநாமங்கள் செப்புவரே.