Soundarya Lahari Sloka 12
Soundarya Lahari Sloka 12 meaning
Bhuta Shuddhi Yogam Part 1
Bhuta Shuddhi Yogam Part 2
How to practice Bhuta Shuddi Yoga
பூத சுத்தி
மூச்சுக்காற்றை பிங்கலை நாடி வழியாக, அதாவது வலப்பக்க மூக்கு வழியாக உள்ளே இழுக்க வேண்டும்
மூலஸ்ருங்காடகாத் ஸுஷும்னாபதேன ஜீவசிவம் பரமசிவபதே யோஜயாமி ஸ்வாஹா
என்று மூலாதாரத்தில் உள்ள ஜீவாத்மா என்று சொல்லப்படும் குண்டலினி சக்தியை ஸுஷும்னா நாடி வழியாக ப்ரஹ்ம ரந்திரம் என்று சொல்லப்படும் ஆயிரம் இதழ் கமலம் உள்ள உச்சி தலை வரை (இதுவே சிவம் இருக்கும் இடம்) கொண்டு சென்று மூலகாரண பரம் பொருளான காமேஸ்வரரிடம் காமேஸ்வரி என்னும் குண்டலினி சக்தியை ஒன்று சேர்க்கவேண்டும். இவ்வளவும் பாவனையாகவே நடைபெற வேண்டும். இடமூக்கு வழியாக மூச்சு காற்றை வெளிவிட வேண்டும். பிறகு மீந்து நிற்கும் இப்பூதவுடலை
ஸங்கோச சரீரம் சோஷய சோஷய ஸ்வாஹா
என்று இடமூக்கு வழியாக வாயு பீஜத்தினால் 16 தடவை மூச்சு காற்றை உள்ளிழுத்து இவ்வுடலானது உலர்த்தப்பட்டதாக எண்ணி வலமூக்கு வழியாக மூச்சுக்காற்றை வெளிவிட வேண்டும்
ஸங்கோச சரீரம் தஹ தஹ பச பச ஸ்வாஹா
என்று அக்னி பீஜத்தினால் மூச்சு காற்றை 16 தடவை வலமூக்கு வழியாக உள்ளிழுத்து இவ்வுடலானது சுட்டு சாம்பல் ஆக்கப்பட்டு விட்டதாக பாவித்து இடமூக்கு வழியாக மூச்சுக்காற்றை வெளிவிட வேண்டும்
பரமசிவ அம்ருதம் வர்ஷய வர்ஷய ஸ்வாஹா
என்று அம்ருத பீஜத்தினால் 16 தடவை மூச்சு காற்றை இடமூக்கு வழியாக உள்ளிழுத்து முன்பு சுட்டு பொசுக்கப்பட்ட சாம்பலை ஸஹஸ்ரார கமலத்திலிருந்து பெருகி வரும் அம்ருதத்தால் துளைக்கப்பட்டதாக பாவனை செய்து வலமூக்கு வழியாக மூச்சுக்காற்றை வெளிவிட வேண்டும்
சாம்பவ சரீரம் முத்யாதயோத் பாதய ஸ்வாஹா
என்று ப்ருத்வி பீஜத்தினால் மூச்சு காற்றை 16 தடவை வலமூக்கு வழியாக உள்ளிழுத்து அம்ருதத்தால் நனைக்கப்பட்ட அந்த சாம்பலிலிருந்து திவ்யமான சரீரம் உண்டாக்கி இருப்பதாக பாவித்து இடமூக்கு வழியாக மூச்சுக்காற்றை வெளிவிட வேண்டும்
அவதர அவதர சிவபதாத் ஜீவ ஸுஷும்னா பதேன ப்ரவிச மூல ஸ்ருங்காடகம் உல்லஸோல்லச ஜ்வல ஜ்வல ப்ரஜ்வல ப்ரஜ்வல ஸ்வாஹா
என்று இடமூக்கு வழியாக மூச்சு காற்றை உள்ளிழுத்து சிவத்துடன் இணைந்து ஒன்றுபட்டிருந்த ஜீவனாகிய குண்டலினி சக்தியை ஸுஷும்னா எனும் நடுநாடி வழியாக இறங்க செய்து மீண்டும் அதை மூலாதாரத்தில் சேர்பித்துவிட்டதாக பாவித்து, தியானித்து வலமூக்கு வழியாக மூச்சுக்காற்றை வெளிவிட வேண்டும்
பிறவி எடுத்த ஒவ்வொருவரும் அன்னையை அறிந்து கொள்ள விரும்பினால் தானே ப்ரஹ்மம் ஆகி விடவேண்டும். அதற்க்கான ஒரே வழி உறங்கி கொண்டிருக்கும் குண்டலினி சக்தியை தட்டி எழுப்பி ப்ரஹ்மரந்திரத்தில் உள்ள சிவத்துடன் ஒன்று படுத்துதலே ஆகும். இவ்வாறு செய்யும் உபாஸகர்கள் இப்பிறவியிலேயே ஜீவன் முக்தர்கள் ஆகி விடுகிறார்கள் என்பது உறுதியாகும்.
Soundarya Lahari Sloka 12 Lyrics
சௌந்தர்யலஹரி ஸ்தோத்ரம் 12
த்வதீ³யம்ʼ ஸௌந்த³ர்யம்ʼ துஹினகி³ரிகன்யே துலயிதும்ʼ
கவீந்த்³ரா꞉ கல்பந்தே கத²மபி விரிஞ்சிப்ரப்⁴ருʼதய꞉ .
யதா³லோகௌத்ஸுக்யாத³மரலலனா யாந்தி மனஸா
தபோபி⁴ர்து³ஷ்ப்ராபாமபி கி³ரிஶஸாயுஜ்யபத³வீம்
श्री सौन्दर्यलहरी स्तोत्र 12
त्वदीयं सौन्दर्यं तुहिनगिरिकन्ये तुलयितुं
कवीन्द्राः कल्पन्ते कथमपि विरिञ्चिप्रभृतयः ।
यदालोकौत्सुक्यादमरललना यान्ति मनसा
तपोभिर्दुष्प्रापामपि गिरिशसायुज्यपदवीम्